Wednesday, November 18, 2020

வீட்டில் விழாவின் போது 'மாவிலை' கட்டுவதன் காரணம்!

 வீட்டில் நடைபெறும் விழாக்களுக்கு சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அழைக்கின்றோம். அவ்விதம் அழைக்கும்போது அவர்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் இருப்பினும் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நம்முடைய இல்லத்தின் விழாவிற்கு வருகை தருகிறார்கள். அவ்விதம் வருபவர்களை நாம் வரக்கூடாது என்று தடுக்க இயலாது. ஆனால், அவர்கள் வருவதால் வரும் நோய் தொற்றுகளை தடுப்பது விருந்தினரை அழைத்த நம் கடமையாகும்.


🌿மேலும், விழாக்களின் போது விருந்தினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் அங்குள்ள காற்றில் அசுத்தமும் அதிகரிக்கும். இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்விதம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் 'மாவிலை" ஆகும். 


🌿மாவிலையில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள். பூஜையின் போது கலசங்களில் உள்ள நீருடன் மாவிலையும் சேர்த்து வைப்பார்கள். பூஜையானது நிறைவுப்பெற்ற உடன் கலசங்களில் உள்ள நீரை மாவிலையின் மூலம் அங்குள்ள பக்தர்களுக்கு தெளிப்பார்கள் மற்றும் சிலர் அந்நீரை அருந்துவார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் மாவிலையனது கலச நீரில் பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்துகிறது. 


🌿 மாவிலை தோரணமானது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை போக்கும் தன்மைக் கொண்டது.


🌿 மாவிலை தோரணமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் நுழைவதை தடுக்கின்றது. 


🌿 மாவிலை தோரணமானது வீட்டினுள் வரும் காற்றினை சுத்திகரித்து அனுப்புவதால் வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியமானது மேம்படும்.


🌿மேலும், மாவிலை என்பது சிறந்த கிருமிநாசினி ஆகும். மாவிலையானது விழாக்கள் நடைபெறும் இடங்களில் உள்ள மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தை சீர் செய்கிறது. 


🌿 மேலும், மாவிலையானது விழாக்களில் வருகை தரும் மக்கள் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டது. காய்ந்த மாவிலையானாலும் அதன் சக்தி குறைவது இல்லை. 


🌿இவ்வளவு வளமும், ஆரோக்கியமும் கொண்ட மாவிலை தோரணத்தை மறந்து கடைகளில் கிடைக்கும் அலங்காரத்திற்கு மட்டும் பயன்படும் மாவிலை தோரணங்களை கட்டுவதால் என்ன பயன்?


🌿 மாவிலை தேனீர் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கும்.


🌿மாவிலை வறண்டு இருந்தாலும் அதன் தன்மையை இழக்காது.


🌿மாமரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பருப்பு அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.


🌿ஆகவே, இனி வரும் நாட்களிலாவது பயனில்லாத செயற்கை அலங்காரத்தை விடுத்து நம் முன்னோர்களின் பாதையில் சென்று நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து இயற்கையுடன் இணைந்து வாழ வைப்போம்.

Thursday, November 12, 2020

சரக்கு!

 டாக்டர்.. தலை சுத்துது.. கண்ணு மங்கலா தெரியது.. தொண்ட கரகரப்பா இருக்கு... கொரோனாவா

இருக்குமோன்னு பயமா இருக்கு...!


ராவா சரக்கு அடிச்சியா...?


எப்படி டாக்டர் கண்டுபிடிச்சீங்க...? You are great!


முண்டம்... பெட்டிக்கடைக்கு வந்து என்னை டாக்டர்னு நெனச்சு பேசிட்டு இருக்கய்யயா...!!

Sunday, November 8, 2020

தீபாவளி இனிப்பு!

 சுகர் பேஷன்டுக்கு

 Special sweetனு போட்டிருந்தான்!


ஆசையா வாங்கி பாக்ஸ்சை திறந்து பார்த்தா சாதா  sweetம்  சுகர் மாத்திரையும்  இருக்கு !!